புதுடில்லி, ஜூலை23- தவறான தகவல்களை பரப்பு வதைத் தடுக்கும் வகையில் யூடியூப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரிஜினல் காட்சிப்பதிவுகளுக்கு மட்டுமே பணம், தரம் குறைந்த காட்சிப்பதிவுகளுக்கு பணம் அளிக்கப்படாது என பல்வேறு விதிமுறைகள் கடந்த ஜூலை 15 முதல் அமல்படுத்தப்பட்டிருந்து. இதைத்தொடர்ந்து, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது.
யூடியூப் சமூக வலைதளம் மூலமாக பலரும் இப்போது புத்தாக்க காட்சிப்பதிவு உருவாக்கு பவர்களாக (கன்டென்ட் கிரி யேட்டர்களாக) மாறியுள்ளனர். ஏராளமானோர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். யூடியூபில் சேனல்களைத் தொடங்கி காட்சிப்பதிவு பதிவேற்றம் செய்து, குறிப்பிட்ட பார்வையாளர்களைப் பெற்றால் அதற்கு யூடியூப் நிறுவனம் பணம் வழங்கி வருகிறது. இதில் பல்வேறு வித்தியாசமான காட்சிப்பதிவுகளைப் பதிவு செய்து நடிகர்கள் அளவிற்கு புகழைப் பெற்று லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.