நார்த்தங்குடி, ஜூலை 23- குடந்தை கழக மாவட்டம் வலங்கை மான் ஒன்றியம் நார்த் தாங்குடி மேனாள் ராணுவ வீரர் பெரியார் பெருந்தொண்டர் ரெங்கசாமி (வயது 86) அவர்கள் உடல் நலக்குறைவால் 21.7.2025 அன்று பிற்பகல் மறை வுற்றார்.
படத்திறப்பு
22-07-2025 பிற்பகல் 3 மணி அளவில் படத்திறப்பு மற்றும் இரங்கல் கூட்டம் நார்த்தாங்குடியில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் தலை மையேற்று ரெங்கசாமி படத்தினை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார்.
வலங்கை ஒன்றிய தலைவர் பவானி சங்கர் ,வலங்கை ஒன்றிய செயலா ளர் ராமச்சந்திரன், தமிழ் ஆர்வன், வழக்குரைஞர் மகேஷ், இரா.வீரகுமார், திரிபுரசுந்தரி, சங்கர், ஜில்ராஜ், வழக்குரைஞர் ரமேஷ், நார்த்தங்குடி கல் யாணசுந்தரம், புஸ்பநாதன், கோ.கணேசன், வழக்கு ரைஞர் நிம்மதி, மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.
மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரமேஷ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.வீர மணி, மாநில பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் கோபு.பழனிவேல், பாவலர் பொன்னரசு பொன்னாபூர் திருநாவுக்கரசு, ராஜேந் திரன் உள்ளிட்ட கழக தோழர்கள் உறவி னர்கள் நண்பர்கள் ஏராளமா னோர் திரண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
மேனாள் ராணுவ வீரர் அரசு போக்குவரத்துக் கழக மேனாள் ஊழியர் பெரியார் பெருந் தொண்டர் ரெங்கசாமி மறைவையொட்டி எந்தவித மூடச் சடங்குகளும் இல்லாமல் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு உடனடியாக படத்திறப்பும் நடத்தப்பட்டது. மூட நம்பிக்கைகள் சடங்குகள் ஏதும் கிடையாது என்று குடும்பத்தினரால் அறிவிக் கப்பட்டது.
பெரியார் பெருந் தொண்டர் ரெங்கசாமி மறைவால் துயரத்தில் உள்ள வாழ்விணையர் லோகம்மாள், இந்திரஜித், தமிழ்வாணன், மென் மொழி, பூங்குழலி, தாமரை நங்கை, பேரறிவாளன், யாழ்திலீபன், பிரபாகரன், புலிதேவன் ,கார்குழலி, கார்மேகம் ,பூர்விகா, கிரண்குமார் ஜெய்சரண், ஆதிரன் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவித்தனர்.