தாம்பரம், ஜூலை 23- 20.7.2025 அன்று மாலை தாம்பரம் மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாள் விழா,திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெரு முனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத் தொடக்கத்தில் கழக கொள்கைப் பாடல்கள் பாடப் பட்டது. தொடர்ந்து மாவட்டத் தலைவர் ப.முத்தையன் கூட்டத்தை நடத்தித் தருமாறு முன்மொழிய அதனை பொதுக்குழு உறுப்பினர் சு.மோகன்ராஜ் வழிமொழிந்து கூட்டம் தொடங்கியது.
தலைமையுரை மாவட்டச் செ செயலாளர் கோ.நாத்திகன் நிகழ்த்தினார். வரவேற்புரை பழனிச்சாமி நிகழ்த்தினார்.
கழக பேச்சாளர் தேவ நர்மதா தம் சிறப்புரையில், தந்தை பெரியார் அவர்களின் 95 ஆண்டுகால பொது வாழ்வை எப்படி தமிழ்நாட்டு மக்கள் நுகர்கிறார்கள் என்றும் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 82 ஆண்டு பொது வாழ்வை பெரியார் வழியில் நின்று எப்படி சமூக சிந்தனைகளை செயல்படுத்துகிறார் – திராவிட மாடல் ஆட்சிக்கு துணை புரிகிறார் என்றும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பொது வாழ்வு என்பது சுமார் 85 ஆண்டுகளுக்கும் மேல் அறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்கு பிறகு கலைஞர் தலை மையில் ஆட்சி அமைந்து தி.மு.கழக ஆட்சியின் திட்டங்களை சட்டப்படி செயல்படுத்தி வரலாற்று சாதனையாக மிளிர வைத்தார்.
தற்போது திராவிட மாடல் ஆட்சி செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டு மக்கள் எண்ணற்ற சாதனை திட்டங்களை பெற்று அதன் மூலம் தங்களுடைய வாழ்வையும் அறிவையும் மேம்படுத்தி வந்தார்கள் வருகிறார்கள் என்பதையும் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஆட்சித் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் சாதனைகள் எண்ணற்றவை. பட்டியலிட்டால் சொல்லிமாளாது. அந்த அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி மிகச் சிறப்பாக தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள தமிழின திராவிட மக்கள் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தலைமையில் இயங்கும் இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்களித்து இந்துத்துவா மதவாதத்தையும் ஜாதிய வாதத்தை யும் ஒன்றியரசின் உரிமைப் பறிப்பையும் முறியடித்து நாம் உரிமையுடன் வாழ்வோம் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக துணை நிற்க வேண்டும் என்று கூறி தம் உரையை நிறைவு செய்தார்கள்.
மு.நாகவள்ளி, கே.மீனாம்பாள், அருணா பத்மாசூரன்,இரா.சு.உத்ரா, அ.ப.நிர்மலா, போதி மாறன், மா,குணசேகரன், எஸ்.ஆர்.வெங்கடேஷ், பி.சுந்தரேசன்,க.மணிமாறன், மா.குமார்,கே.விந்தசாமி, பி.சி.ஜெயராமன்,ப.கண்ணதாசன்,பொழிசை க.கண்ணன், அரிச்சந்திரன்,என்.பார்த்திபன, பி.சி.சந்திரசேகர், பெரியார் மாணாக்கன், சீ.லட்சுமிபதி எம்.எஸ்.ராமசந்திரன், முனைவர் பெ.அண்ணாதுரை, சிவாஜி,சண்.சரவணன்,தனசேகரன், மணி பாரதி,அ.ஆப்ரகாம்,சதீஷ்குமார், நா.முருகன், சீனிவாசன், என்.ஜி.ராவிச்சந்திரன், செ.செல்வ மீனாட்சி, அன்பு,நாகராஜன், மா.குணரங்கன், கே.முருகன்,எஸ்.சினிவாசன், ஆறுமுகம்,சூரிய பிரகாஷ், ஜி.பாலாஜி மற்றும் ஜி.சுரேஷ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.