மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21.07.2025 அன்று சென்னை, இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் -2023 நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கப்பெற்ற பதிவுத் தொகை ரூ.10.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மய்யம் மற்றும் ரூ.40.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 7.8.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் கட்டுமானப் பணிகளை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில் இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஆயிஷா ஷாகின் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் -2023 நிகழ்ச்சி

Leave a Comment