நான்காண்டு ‘திராவிட மாடல்’ தி.மு.க. ஆட்சியின் சாதனை இரண்டரை கோடி சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு

சென்னை, ஜூலை 23- 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 2.5 கோடி மகளிருக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் கோடி வங்கிக்கடன் இணைப்பு வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நேற்று முன்தினம் (21.7.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண்களின் முன்னேற்றம்

பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் என்ற ஒரு தனி நிறுவனத்தை தொடங் கியதன் மூலம் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது.

மேனாள் முதலமைச்சர் கலைஞர், முதன்முறையாக 1989ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழு இயக்கம் என்ற மகத்தான இயக்கம் தொடங்க வித்திட்டார்.

அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலில் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

சுய உதவிக்குழுக்களின் பொருளாதாரத் தேவையை கருத்தில் கொண்டு, அவைகளின் தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

குழுக்களின் வளர்ச்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப் பேற்ற  2021-2022ஆம் நிதி ஆண்டில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 740 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21 ஆயிரத்து 392 கோடியே 52 லட்சம், 2022-2023ஆம் நிதி ஆண்டில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 209 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரத்து 642 கோடியே 1 லட்சம், 2023- 2024ஆம் நிதி ஆண்டில் 4 லட்சத்து 79 ஆயிரம் 350 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 ஆயிரத்து 74 கோடியே 76 லட்சம், 2024-2025ஆம் நிதி ஆண்டில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 659 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.35 ஆயிரத்து 189 கோடியே 87 லட்சம் வழங்கி சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக்கடன் சுய இணைப்பு வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை தொடர்ந்து, 18.7.2025 லட்சத்து 4 ஆயிரத்து 538 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 13 லட்சத்து 58 ஆயிரத்து 994 உறுப்பினர்களுக்கு ரூ.9 ஆயிரத்து 113 கோடியே 24 லட்சம் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப் பேற்ற  4 ஆண்டுகளில் 19 லட்சத்து 26 ஆயிரத்து 496 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 2 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 448 சுய உதவிக்குழு மகளிருக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 415 கோடியே 40 லட்சம் வங்கிக்கடன் இணைப்பு வழங்கி சாதனை படைத்து, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *