இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை
சென்னை,ஜூன்15- சமூகநீதிக்கு எதிராகப் போராடும் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அர சின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று தமிழ்நாடு மிச்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை வருமாறு:-
மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மருத்துவப் பொதுக் கலந்தாய்வு, ஏழை, அடித்தட்டு மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நெக்ஸ்ட் எனப்படும் தேசிய மருத்துவ தகுதி தேர்வு, சிறுபான்மையினருக்கு எதி ரான குடியுரிமை திருத்தச் சட்டம், ஹிந்தி திணிப்பு நடவடிக்கைகள் போன்ற ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாமல் ஒன்றிய அரசு தவித்து வருகிறது. மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி இனியும் எடுபடாது என்பதை அண்மையில் நடந்துமுடிந்த கருநாடக சட்டமன்றத் தேர்தல் தெளிவாக வெளிப்படுத்தி யுள்ளது. தென்மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிவடையத் தொடங் கியுள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகளிலி ருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும், சமத்துவம் சமூகநீதியை நிலைநிறுத்தவும், பாடுபட்டு வரும் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக் கும் நோக்கத்திலும் அரங்கேற் றப்பட்டுள்ள தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை யின் கைது நடவடிக்கை மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்திற்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சென்றிருப்பதும் கண்டிக்கத்தக்கது.
பா.ஜ.க. அல்லாத அரசுகளை மிரட்ட அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அமைப்புகளை ஒன்றிய அரசு பயன்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் சமூகநீதிக்கு எதிராகப் போராடும் திராவிட மாடல் ஆட்சியை ஒடுக்க நினைக் கும் பா.ஜ.க. அரசின் கனவு பலிக் காது. இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.