தமிழ்நாட்டில் குரூப் 2, 2ஏ அறிவிப்பு வெளியீடு

3 Min Read

அரசுப் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிக காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 645 காலிப்பணியிடங்களுக்கு மட்டும் வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு மொத்தம் 645 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. குரூப் 2 பதவிகளில் 50 இடங்களும், குரூப் 2ஏ பதவிகளில் 595 இடங்களும் இடம்பெற்றுள்ளன.

காலிப் பணியிடங்கள் விவரம்: குரூப் 2 – 50, குரூப் 2ஏ – 595, மொத்தம் – 645.

குருப் 2 பதவிகள்: உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், தனிப்பிரிவு உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் ஆகிய பணியிடங்கள் குரூப் 2 கீழ் நிரப்பப்படுகிறது.

குரூப் 2ஏ பதவிகள்): குரூப் 2ஏ கீழ் முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், தமிழ்நாடு அமைச்சுப் பணியில் உதவியாளர், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர், மாநில தேர்தல் ஆணையம் உதவியாளர், சட்டமன்ற பேரவை கீழ்நிலை செயலிட எழுத்தர் உள்ளிட்ட பதவிகள் இடம்பெறுகின்றன.

வயது வரம்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவிகளுக்கு 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்ச வயது வரம்பாக நன்னடத்தை அலுவலர் பதவிக்கு 22, 26, வனவர் பதவிக்கு 21, சார் பதிவாளர் பதவிக்கு 20 எனவும், இதர பதவிகளுக்கு 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வனவர் பதவிக்கு வயது உச்ச வரம்பு 37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பதவிகளுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.

குரூப் 2ஏ பதவிகளில் செயல் அலுவலர் பதவிக்கு மட்டும் குறைந்தபட்ச வயது 25 ஆக உள்ளது. இதர பதவிகளுக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு கிடையாது.

கல்வித் தகுதி: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பெரும்பாலான பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் போதுமானது.

ஊதிய விவரம்: தமிழ்நாடு அரசு ஊதிய விதிமுறைகளில் நிலை 9 முதல் நிலை 18 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு கடந்த ஆண்டு முதல் நேர்காணல் கிடையாது. முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்ட தேர்வு நடத்தப்படும்.

குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு முதல்நிலை தேர்வு நடத்தப்படும். இது தகுதி தேர்வு மட்டுமே. இதில் தகுதி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி அடைவார்கள்.

முதன்மைத் தேர்வு, குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்படும். இரண்டிற்குமான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, கலந்தாய்வின் மூலம் பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். வகுப்பு வாரியாக கட்டண தளர்வு உள்ளது. அதனை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

தேர்வர்கள் https://apply.tnpscexams.in/ என்ற இணையதளத்தில் OTR பதிவு செய்து, பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே OTR பதிவு செய்தவர்கள், நேரடியாக தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான இணைய வழி மூலம் விண்ணப்பம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் திருத்தம் செய்ய 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். முதன்மைத் தேர்வு தேதி, முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.08.2025

முதல்நிலை தேர்வு: 28.09.2025 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *