வெப்பநிலை
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங் கிய பிறகும் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறையாத நிலையில், நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் தகவல்.
அதிகரிப்பு
இந்தியாவில் இன மோதல், தேர்வு முறைகேடுகளை தடுப்பது உள்பட பல்வேறு காரணங்களுக்காக இணைய சேவை முடக்கம் அதிகரித்துள்ளதாக இணைய சுதந்திர அமைப்பு மற்றும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொறுப்பு
தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பை அமல்படுத்துவது அந்தந்த நிர்வாகங்களில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் முக்கிய பொறுப்பு என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தகவல்.
நியமனம்
தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாடு அரசு நேற்று (14.6.2023) அறிவித்துள்ளது.
படிப்புக்கு…
தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு: 044-29567885, 29567886 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
அபராதம்
சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 5 மாதத்தில் 13,638 பேர் வழக்கு பதிவு செய்து ரூ.14.10 கோடியை மாநகர காவல்துறை அபராதமாக வசூலித்துள்ளது. இதுபோல, போக்குவ ரத்து விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 1,29,241 நிலுவை வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.