கோவை, ஜூன் 15- கோவையில், தெற்கு தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற அலு வலகத்தில் நுழைந்த நபர் ஒருவர், சாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் அலுவலகம், ரேஸ்கோர்ஸில் மத்திய மண்டல அலுவலகம் அருகே உள்ளது. 12.6.2023 அன்று மாலை இந்த அலுவலகத்தில் ஊழியர் பணியில் இருந்தார். அப்போது அலுவலகத் துக்குள் நுழைந்த இளைஞர் ஒரு வர், அலுவலகத்தின் கதவை உள் பக்கமாக பூட்ட முயன்றார். அதிர்ச்சியடைந்த ஊழியர், அந்த இளைஞரைப் பிடித்து அலுவ லகத்தை விட்டு வெளியே தள்ளி னார். அலுவலகம் முன்பு சாலை யில் விழுந்த அந்த இளைஞர், பின்னர் அங்கிருந்து எழுந்து சென்றார்.
இந்நிலையில், 12.6.2023 அன்று இரவு அந்த இளைஞர், அவிநாசி சாலையில் பி.ஆர்.எஸ் எதிரேயுள்ள மியூசியம் அருகே சாலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், அந்நபரின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
தற்கொலை முயற்சி:
முதல்கட்ட விசாரணையில் அந்த இளைஞர், சாலையில் வந்த வாகனம் மோதி உயிரிழந்து இருக்கலாம் எனத் தெரியவந்தது.
அவர் எதற்காக சட்டமன்ற அலுவலகத்துக்குள் நுழைந்தார், திருட நுழைந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஒருபுறம் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, உயிரிழப்பு குறித்து காவலர்கள் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர், சாலையில் வந்த அரசுப் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் தற்கொலை பிரிவில் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் அலு வலகத்தில் குறைதீர்க்க மனு கொடுக்கவந்த நபர் ஏன் சட்ட மன்ற அலுவலகத்தில் உள்ள நபர் களால் தள்ளிவிடப்பட்டார், பின் னர் அவர் கீழேவிழுந்து தள்ளாடி நடந்துசென்றது கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது
இந்த நிலையில் அவர் தற் கொலை செய்துகொண்டார் என்ற செய்தியால் சட்டமன்ற உறுப்பினர் மீது சந்தேகம் எழுந்துள்ளது இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் மரண மடைந்த நபர் யார் என்பது விசா ரணை நடந்துவருகிறது