22.7.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜூலை 27 – மேற்கு வங்கத்தில் ‘மொழி இயக்கம்’: “வங்க மொழிக்கு எதிராக பாஜக மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது. அக்கட்சி, மேற்கு வங்கத்தின் அடையாளம், மொழி, கலாச்சாரம், பெருமை ஆகியவற்றை அழிக்கத் துடிக்கிறது. வங்க மொழிக்கு எதிரான மொழி பயங்கரவாதத்தை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இங்கு தொடங்கப்படும் எதிர்ப்பு இயக்கம் டில்லி வரை செல்லும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா எச்சரிக்கை.
* 20 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு: 2006ஆம் ஆண்டு 180 பேரை பலி கொண்ட மும்பை தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளும் விடுதலை: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. விசாரணையின் போது தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதை குற்றவாளிகள் நிரூபித்துள்ளனர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் திடீர் விலகல்: உடல்நலக் குறைவால் பதவி விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம்
தி இந்து:
* அமலாக்கத்துறை அதிகாரிகள் அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, அரசியல் சண்டைகளுக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்தது.
* மக்களவையில் பேச எனக்கு உரிமை உள்ளது. ஆனால், ஒருபோதும் நான் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆட்சியாளர்கள் ஏதாவது சொன்னால் அது குறித்து பேச எதிர்க் கட்சியினருக்கும் அனுமதி தர வேண்டும். ஆனால் அனுமதி தரப்படுவதில்லை. 2 வார்த்தைகள் பேச விரும்புகிறோம். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது என ராகுல் கண்டனம்.
* விதிமீறல்கள் நிறைந்த பீகார் வாக்குச்சாவடி பட்டியல்களின் திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும்: பொருளாதார அறிஞர் ஜீன் டிரேஸ் கருத்து. பல சந்தர்ப்பங்களில், வாக்காளர்கள் தங்கள் படிவங்கள் ஏற்கெனவே பி.எல்.ஓ (BLO) ஆல் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். படிவங்களில் அவர்களின் கையொப்பங்கள் கூட எடுக்கப்படவில்லை; படிப்பறிவில்லாத வாக்காளர்கள் படிவத்தை நிரப்ப ஒருவருக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தது என்று தெரிவித்தனர் என பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விவாதிக்க வலியுறுத்தல் எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு, இவ்விவகாரம் குறித்து 16 மணி நேரம் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “மகாராஷ்டிராவுக்குப் பிறகு, வாக்காளர் பட்டியலை திருத்தி மத்தியப் பிரதேசத்திலும் தேர்தலை திருட ஒரு திட்டம் உள்ளது. மகாராஷ்டிராவில் நடந்தது போலவே, வாக்காளர் பட்டியல் கையாளுதல் மத்தியப் பிரதேசத்திலும் நடக்கும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* நாட்டிற்கு ‘அவமானகரமானது’: மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுவது நாட்டிற்கு “அவமானகரமானது” என்று எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளை சிறப்பு திருத்த பட்டியலுக்கு எடுத்துக் கொள்ள முடியாது என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆதார் என்பது ஒரு அடையாளச் சான்று மட்டுமே; நாட்டில் ஏராளமான போலி ரேஷன் அட்டைகள் சுற்றி வருகின்றன; மேலும் ஏற்கனவே உள்ள வாக்காளர் அட்டைகளை நம்பியிருப்பது சிறப்பு இயக்கத்தை பயனற்றதாக்கும் என வாதாடி உள்ளது.
– குடந்தை கருணா