திருச்சி, ஜூலை 22- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் Green Analysis of Drugs without using Organic Compountsஎன்ற தலைப்பிலான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை மருந்தாக்க வேதியியல் துறையின் சார்பில் 18.07.2025 அன்று நடை பெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலை மையில் நடைபெற்ற துவக்கவிழா நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள ழு.ளு. ஐளேவவைரவந G.S. Institute of Technology and Science கல்வி நிறுவனத்தின் மருந்தியல் பயிற்சித்துறை மேனாள் தலைவரும் பேராசிரியருமான முனைவர் இராஜேஷ் குமார் மகேஷ்வரி கரிம கரைப்பான்களின் பயன்பாடு இல்லாமல் மருந்துகளை பசுமை பகுப்பாய்வு செய்வது குறித்து மாணவர்கள் மத்தியில் விளக்கினார்.
மேலும் ஆய்வகத்தில் அதனை மேற்கொள்ளும் முறைகளை செய்முறை பயிற்சியாக விளக்கி மாண வர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற நிறைவு விழாவில் பயிற்சிப் பட்டறையில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிறைவில் மருந்தாக்க வேதியியல் துறை பேராசிரியர் எம்.கே.எம். அப்துல் லத்தீஃப் நன்றியுரையாற்றினார். கல்லூரியின் பேராசிரி யர்கள் மற்றும் மாண வர்கள் என மொத்தம் 120 பேர் பங்கு கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.