மேட்டூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மேட்டூர் கழக மாவட்ட தலைவர் க.நா.பாலு தலைமையில், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கோவி.அன்புமதி முன்னிலையில், நகர தலைவர் இரா.கலையரசன், பெரியார் படிப்பக பொறுப்பாளர் கோ.குமார், எடப்பாடி சண்முகசுந்தரம், மாணவர் கழக தோழர்கள் சு.குறிஞ்சி அழகன், நா.இலக்கியன், ரா.பாலாஜி, அ.அப்துல் ரகுமான், சி.சஞ்சய், வெ.விக்னேசுவரன் ஆகியோர் 21.7.2025 அன்று மேட்டூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு மேனிலைப் பள்ளி மாணவர்களிடையே, செம்மொழி தமிழ் வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து துண்டறிக்கை வழங்கப்பட்டது.