கடவுள் உண்டு என்றோ, இல்லை என்றோ யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. கடவுள் இல்லை என்று சொல்வதால் இருக்கும் கடவுள் அழிந்து போகாது. கடவுள் உண்டு என்று சொல்வதால் இல்லாத கடவுளை உண்டு பண்ணப் போவதும் இல்லை. எனவே கடவுளைப் பற்றிய விசயமெல்லாம் அவரவர்களின் சொந்த விசயம். அந்தக் கடவுளை ஒருவன் தன்னளவில் உண்டு என்றோ, இல்லை என்றோ வைத்துக் கொள்வதில் தடை எதுவும் இருக்கின்றதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’