தஞ்சாவூர், ஜூலை- 22- தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை பொதுநலத்தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் மற்றும் தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்டம் சார்பில் கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் சிறப்பு கூட்டம் 19-07-2025 அன்று மாலை 6:00 மணி அளவில் தஞ்சாவூர் மாதாகோட்டை சாலை பெரியார் படிப்பகம் எதிரில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார்.
மாநகர விடுதலை வாசகர் வட்ட தலைவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி.ஜி இராஜேந்திரன் தலைமை உரை ஆற்றினார்.
பெரியார் படிப்பக இயக்குநர் முனைவர் ந.எழிலரசன், படிப்பக பொருளாளர் முனைவர் வே.ராஜ வேல், விடுதலை வாசகர் வட்ட புரவலர் பொறியாளர் கோ.ரவிச் சந்திரன், விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் வெ.துரை, விடுதலை வாசகர் வட்ட துணைச் செயலாளர் ச.விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர் அ.ஜேம்ஸ் உரையாற்றினர்.
தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட புரவலர் பேராசிரியர் உரு.ராஜேந்திரன், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட புரவலர் மயக்கவியல் மருத்துவர் த.அருமைக்கண்ணு ஆகியோர் தொடக்க உரை நிகழ்த்தினர். படிப்பக செயலாளர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றி குமார் இணைப்புரை வழங்கினார்.
காமராஜரின் கொலை முயற்சி முதல் கவுரி லங்கேஷ் கொலை வரை
திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ மதிவதனி காமராஜரின் கொலை முயற்சி முதல் கவுரி லங்கேஷ் கொலை வரை என்னும் தலைப்பில் ஆர் எஸ் எஸ் சித்தாந்தவாதிகளின் போலி முகத்திரையை பொது மக்களிடம் எடுத்துரைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட காப்பாளர் படிப்பகப் புரவலர் மு.அய்யனார், மாநகர விடுதலை வாசகர் வட்ட புரவலர்கள் பொறியாளர் பா.சிவானந்தம், பேராசிரியர் ப.திருநாவுக்கரசு, மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் படிப்பகப் புரவலர் செ. தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, மாநகர செயலாளர் படிப்பக தலைவர் இரா.வீரக்குமார், ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
சி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பொறியாளர் பா.சிவானந்தம், பிள்ளை & சன்ஸ் சீனிவாசன், பேராசிரியர் ப.திருநாவுக்கரசு ஆகியோர் விடுதலை வாசகர் வட்டப் புரவலர்களாக அறிவிக்கப்பட்டனர்.
தமிழ் ஆசிரியர் கந்தசாமி எலிசா நகர் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டனர். விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் மு.செந்தில் குமார் நன்றியுரை ஆற்றினார்.
பங்கேற்றோர்
இந்நிகழ்ச்சியில் கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அன்பழகன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், படிப்பக நிர்வாகி ஆ.பிரகாஷ், மருத்துவர் செந்தாமரைச்செல்வன், குழந்தைசாமி, எஸ் என் குசலவன், கவிஞர். பகுத்தறிவு தாசன், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில ப க அமைப்பாளர் கோபு பழனிவேல், குடந்தை மாவட்ட செயலாளர் சு.துரைராசு, நெல்லு பட்டு இராமலிங்கம், ப சுதாகர், அ கலைச்செல்வி, இரா துரைராசு , பெரியார் கண்ணன், தேன்மொழி, பொறியாளர் கீதபிரியா, மா அழகிரிசாமி, மாநகரத் துணைச் செயலாளர் இளவரசன் மாவட்ட மகளிர் அணி தலைவர் அ. கலைச்செல்வி, மாநகர மகளிர் அணி தலைவர் ந.கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை தலைவர் அஞ்சுகம், ஜெகதா ராணி, பாவலர் பொன்னரசு, தே. பொய்யாமொழி மற்றும் விடுதலை வாசகர் வட்ட உறுப்பினர்களும் கழகத் தோழர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பாராட்டி சிறப்பு செய்தல்
தஞ்சை மாநகரக் கழகத்திற்கு கூட்டங்கள் நடத்துவதற்கு மேடையை அன்பளிப்பாக வழங்கி சிறப்பித்த மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துருவுக்கும் ஜூலை19 அன்று பிறந்த நாள் கண்ட பிரசாந்த் அவர்களுக்கும் கரந்தை கல்லூரி மாணவர்கள் அபிஷேக் துளசிதாசன் பிரகாஷ்க்கும் விடுதலை வாசகர் வட்ட தலைவர் பி.ஜி.இராஜேந்திரன் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.