ஜூலை 1ஆம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ள “பொதுக் கூட்டத்திற்கான அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி வழங்கினார் (சென்னை, 14.6.2023)
திராவிடர் இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க. திருநாவுக்கரசு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, தி.சிற்றரசு – தா. இளவரசி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார். உடன் மகன் தி.சிற்றரசு. (பெரியார் திடல், 14.6.2023)
தமிழ்நாடு அரசு, ’கலைஞர் நூற்றாண்டு விழா’ குழுவுக்கான உறுப்பினர்களை அறிவித்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான அஜயன் பாலா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய “மார்லன் பிராண்டோ” புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழகத் தின் பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன். (பெரியார் திடல், 13.6.2023)