தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறையில் புதிய வேகம்! வருகிறது புதிய மென்பொருள்!

4 Min Read

சென்னை, ஜூலை 22- தமிழ்நாட்டில் கோவை, சென்னை, வேலூர், மதுரை உள்ளிட்ட பத்திரப்பதிவு மண்டலங்களில் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகிறது.

பத்திரப்பதிவு பணிகள் இணைய  வழி மயமாக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதியில் சில நேரங்களில் சர்வர் தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பதிவு பணிகளின்போது அதிக ஆவணங்கள், 30 ஆண்டிற்கு மேலான பத்திரங்கள் கையாளப்பட்டு வருகிறது. வில்லங்கச் சான்று, பத்திர நகல் பெறுவது அதிகமாகி வருகிறது. தற்போது பத்திரப் பதிவிற்கு ஸ்டார் 2.0 சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.

‘ஸ்டார் 3.0’

பதிவு பணிகளை வேகப்படுத்த தொழில் நுட்பத்தை மேம்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக ஸ்டார் 3.0 என்ற மேம்படுத்தப்பட்ட ‘கிளவுட் கம்யூட்டிங்’ சாப்ட்வேர் தொழில் நுட்பம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பைலட் புராஜக்ட் துவக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.

விரைவில் இந்த புதிய மென்பொருள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் பதிவு பணிகள் இப்போதுள்ளதை காட்டிலும் வேகமாக எளிதாக முடியும் என பத்திரப் பதிவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது தினமும் ஒரு பதிவு அலுவலகத்தில் 40 முதல் 100 பத்திரங்கள் பதிவாகிறது. புதிய தொழில் நுட்பம் வந்தால் பதிவுகள் இப்போதுள்ளதை காட்டிலும் ஓரிரு மடங்கு அதிகரிக்க முடியும். வீட்டில் இருந்தபடி, இணைய  வழி மூலமாக பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்ய முடியும். பதிவுக்கான ஆதார், போட்டோ பதிவுகளையும் பதிவு அலுவலகம் செல்லாமல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பதிவு அலுவலகத்தில் பத்திரங்களை பார்த்து ஒப்புதல் வழங்கும் வகையில் ஸ்டார் 3.0 சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 50 ஆண்டு கால ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும், அதற்கான வில்லங்க சான்று எடுக்கவும் பதிவுத்துறை தயாராகி வருகிறது.

பிழையின்றி பதிவு செய்ய…

பத்திரப் பதிவுத் துறையினர் கூறுகையில், ‘‘கால தாமதம், புரோக்கர் தலையீடு, போலி பத்திரங்கள், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் புதிய மென்பொருள் தயார் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பதிவு பணியின்போது ஜிபிஎஸ் பதிவுடன் கூடிய போட்டோக்கள் வைக்கப்படுகிறது. புதிய திட்டத்தில் மேலும் சில தொழில் நுட்பங்கள் இடம் பெறும். எந்த வகையிலும் பிழைகள் இல்லாமல் சரியான முறையான வகையில் பத்திரங்கள் பதிவு செய்ய இந்த மென்பொருள் உதவிகரமாக இருக்கும். நவீன மென்பொருள் மூலமாக எந்த நேரத்திலும் சர்வர் முடங்காமல் இருக்க தேவையான ஏற்பாடுகள் நடக்கிறது. பதிவுத்துறையுடன் வருவாய், நில நிர்வாகம், சர்வே போன்ற துறைகளையும் ஒருங்கிணைக்க, ஆதாரங்களை சரிபார்க்க வசதிகள் செய்யப்படும். பட்டா, சிட்டா ஆதாரங்களை உறுதி செய்யவும் வழி வகை செய்யப்படும். புதிய திட்டம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.

நிலம், வீடு வாங்குவோர் முந்தைய விவரங்களை சரிபார்க்க பெறும் வில்லங்க சான்றிதழில் சார் – பதிவாளர் அலுவலகம், பதிவுத் துறையின் எந்த மண்டலத்தில், எந்த பதிவு மாவட்டத்துக்குள் வருகிறது என்ற விவரம் இடம் பெறுவதில்லை.

இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் புதிதாக உருவாக்கப்படும், ‘ஸ்டார் 3.0′ மென்பொருள் மூலம் மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொலைநோக்குப் பார்வை

சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களைத் தங்கவைக்க 169 இடங்கள் தயார்

சென்னை, ஜூலை 22- சென்னை மாநகரப் பகுதிகளில் மழை பாதிப்புகள் ஏற்பட்டால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களைத் தங்கவைக்க 169 இடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னெச்சரிக்கை

சென்னை மாநகரப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் மழைநீா் வடிகால்களைத் தூா்வாருதல், ஏற்கெனவே மழைநீா் தேங்கிய இடங்களில் தண்ணீா் வடிவதற்கான புதிய வடிகால்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

தூர்வாரப்பட்டன

தற்போது சென்னையில் 44 பெரிய கால்வாய்கள் சுழற்சி முறையில் தூா்வாரப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் 11, 760 மழைநீா் வடிகால்கள் உள்ள நிலையில், அவற்றில் சுமார்1,034 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கடந்த ஆண்டு மழைக்கால ஆய்வின்படி, 87 இடங்களில் மழைநீா் தேங்குவது அடையாளம் காணப்பட்டு அங்கு தற்போது புதிதாக வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மழைநீரை வெளியேற்றுவதற்கான மின்மோட்டார் அமைக்கப்பட்டுள்ளன.

குளங்கள் மறுசீரமைப்பு

ஏற்கெனவே உள்ள கால்வாய்களில் 600 இடங்களில் சேதமடைந்தவற்றை சீா்படுத்தியும், புதிதாக கால்வாய் சுவா் உள்ளிட்டவை அமைத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீரைத் தேக்கும் வகையில் 201 குளங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தால், அந்தப் பகுதியில் இருப்பவா்களைத் தங்கவைப்பதற்கு 169 இடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார்  நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *