கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

2 Min Read

21.7.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

< என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடங்களில் முஸ்லிம் மன்னர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு.

தி இந்து:

< பீகாரில் பெரிய அளவிலான வாக்குரிமை பறிப்பு குறித்து நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)க்கு எதிராக 35 தலைவர்களின் ஆதரவைக் கோரி எழுதிய கடிதத்தை பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பகிர்ந்துள்ளார். பீகாரில் நடந்து வரும் எஸ்.அய்.ஆரின் கேலிக்கூத்து ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைத்து வருவதாக ஆர்.ஜே.டி.யின் தேஜஸ்வி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

< பீகாரில் 27.4% க்கும் அதிகமான பட்டியலின வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் (EC) மீது “நம்பிக்கை இல்லை” என்றும், மாநிலத்தில் உள்ள
58%க்கும் மேற்பட்ட பட்டியல் ஜாதி (SC) வாக்கா ளர்கள், வரவிருக்கும் தேர்தல்களில் வேலையின்மை மிகப்பெரிய பிரச்சனை என்றும் நினைப்பதாக புதிய கருத்துக் கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

< நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக ஒன்றிய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தங்கள், பகல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் டிரம்பின் கூற்றுகள் உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என தெரிவிக்கப்பட்டது.

< அதன் கண்ணில் படும் எதையும் விசாரிக்க அமலாக்கத்துறை ஒரு “சூப்பர் போலீஸ்” அல்ல, அல்லது எந்த “குற்றச் செயல்களையும்” தன்னிச்சையாகத் தாக்கும் “ட்ரோன்” அல்ல, சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம். சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.எம். பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.901 கோடி நிலையான வைப்புத் தொகையை விடுவிக்க உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் தீர்ப்பு.

தி டெலிகிராப்:

< சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது குறைந்தது அய்ந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சி செனட்டர்களிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார். எந்த நாடு எத்தனை விமானங்களை இழந்தது என்பதை தெரிவிக்க வில்லை.

டைம்ஸ் ஆப் இந்தியா:

< “இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான தொலைக்காட்சிகளின் 80% கூறுகள் சீனாவிலிருந்து வருகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ‘மேக் இன் இந்தியா’ என்ற பெயரில், நாங்கள் வெறுமனே கூறுகளை ஒன்றிணைக்கிறோம், உண்மையிலேயே உற்பத்தி செய்யவில்லை. அய்போன்கள் முதல் டிவிகள் வரை – பாகங்கள் வெளிநாட்டில் இருந்து வருகின்றன; நாங்கள் அவற்றை ஒன்றாக இணைக்கிறோம்.” என எக்ஸ் தளத்தில் ராகுல் பதிவு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *