குடியாத்தம்,ஜூன்15- குடியாத் தத்தில் வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மக்களுக்கான இலவச பொது மருத்துவம் மற்றும் மகளிருக்கான புற்று நோய் கண்டறிதல் மருத்துவ முகாம் 11.06.2023 அன்று காலை 10.00 மணி யளவில், குடியாத்தம் போடி பேட்டை சாலையில் உள்ள பெரியார் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச் சிக்கு வேலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் இர.அன்பரசன் தலைமை ஏற்றார்.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் மா. அழகிரிதாசன் தொடக்கவுரையாற்றினார்.
வேலூர் மாவட்டம் மகளிர் அணி தலைவர் ந.தேன்மொழி இணைப்புரை நிகழ்த்தினார். வேலூர் மாவட்ட திரா விடர் கழக செயலாளர் உ. விஸ்வநாதன் கழக காப்பாளர்கள் வி.சடகோபன், ச.ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலு, குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராசன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். குடியாத்தம் நகர மன்ற துணைத் தலைவர் எம்.பூங்கொடி மூர்த்தி, ஆட்டோ பி. மோகன் நகர மன்ற உறுப்பினர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறந்த கருத்துகளை எடுத்துரைத்தனர். தொழிலதிபர் ஆர்.ஆர்.ரவிசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண் டார். மருத்துவ முகாமில் குடியாத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் எம்.மாறன் பாபு முகாமின் நோக்கத்தையும் அவசியத் தையும் எடுத்துக் கூறியதோடு தமிழ் நாடு அரசின் காப்பீடு திட்டம் மருத்துவ துறையில் எப்படி பலனளிக்கிறது என் பது பற்றியும் எடுத்துக் கூறினார்.
பல் மருத்துவர் கே.ஷர்மிலி, அறு வைச் சிகிச்சை நிபுணர் செந்தில்குமார், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.சதீஷ், கண் அறுவை சிகிச்சை நிபுணர் சக்தி பிரியா மற்றும் செவிலியர்கள் சத்தியா, சுப்ரியா மருத்துவ உதவியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ சேவை யாற்றினர்.
இம்முகாமில் மூலம்,பவுத்திரம், குட லிறக்கம், தைராய்டு கட்டிகள், எலும்பு, கண்புரை, காது மூக்கு தொண்டை மற்றும் பொது மருத்துவ பிரிவில் 135 நபர்கள் கலந்து கொண்டு பயன டைந்தனர். மகளிருக்கான சிறப்பு புற்று நோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாமில் 27 பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். குடியாத்தம் திராவிடர் கழகத் தலைவர் சி.சாந்த குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் லதா, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் பெ.இந்திரா காந்தி, நகர மகளிர் பாசறை தலைவர் எ.ராஜகுமாரி, பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் க.சையத்அலீம், க. பரமசிவம், ஆசிரியர் தனபால்,ஆ.மொ. வீரமணி, ச. ரம்யா வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ஆகியோர் முகாமை ஒருங் கிணைத்தனர்.