தஞ்சை, ஜூலை 21- திமுக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனை 20.7.2025 அன்று காலை 8.30 மணி அளவில் சாக்கோட் டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட காப்பாளர் மு. அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், கும்பகோணம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, கும்பகோணம் மாவட்ட செயலாளர் சு.துரைராசு, கும்பகோணம் மாவட்டத் துணைத் தலைவர் வ.அழகுவேல், நாகை மாவட்ட செயலாளர் ஜெ. பூபேஷ்குப்தா, பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார், குடந்தை மாவட்ட துணை செயலாளர் தமிழ்மணி மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஜில்ராஜ், சோழபுரம் சித்தார்த்தன், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன், கும்பகோணம் மாநகரத் தலைவர் வழக்குரைஞர் ரமேஷ், கும்பகோணம் ஒன்றிய தலைவர் மருதநல்லூர் மகாலிங்கம், திருப்பனந்தாள் ஒன்றிய தலைவர் பட்டம் மோகன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் சாக்கோட்டை அன்பழகனுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.