தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (21.7.2025) மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் சந்தித்து, மயிலாடுதுறையில் 16.7.2025 அன்று நடைபெற்ற அரசு விழாவில், மீனவர்களின் நலனிற்காக தரங்கம்பாடி வட்டத்தில் இருக்கும் தாழம்பேட்டை மற்றும் வெள்ளக்கோயில் கிராமங்களில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும், திருமுல்லை வாசல், மீனரங்கதரத்தில் மேல் கல்சுவர், நீட்டிப்பு மற்றும் தூர்வாருதல் பணி மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்து, கோரிக்கை மனு அளித்தனார். உடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம். முருகன், மு.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.