திருச்சி, ஜூலை 21- திருச்சி, நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் திருச்சி கண் மருத்துவமனை இணைந்து நேற்று (20.07.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொது மருத்துவம், கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகா மினை மணிகண்டம் கிராம மக்கள் பயன்பெறும் வண்ணம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடத்தியது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை முன்னிலையில் விராலிமலை MM FORGlNGS நிறுவனத்தின் பொது மேலாளர் சி.லட்சுமணன் இம்மருத்துவ முகாமினை துவக்கி வைத்து சிறப்பித்தார்.
ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜான் ஆண்டனி மற்றும் ராசாத்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமில் 68 பேரும் திருச்சி கண் மருத்துவமனையின் மருத்துவர் அர்ச்சனா தேவி தலைமையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் 58 பேரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மருந்து மாத்திரைகள்
இம்மருத்துவ முகாமில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் அ.ஜெசிமா பேகம் மற்றும் மாணவர்கள் பொது மக்களுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.
பரிசோதனை
மக்களை அதிகம் பாதிக்கும் குடல்வால்வு, நரம்பு சுருட்டல், தைராய்டு கட்டிகள், தோல் கட்டிகள், பித்தப்பை கட்டிகள், மூல நோய் போன்ற அறுவை சிகிச்சைகள் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் தொடர்பான பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இம்மருத்துவ முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ.அருணாசலம் மற்றும் மருத்துவமனை பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.