புதிய பொறுப்பாளர்கள், தொடர் கருத்தரங்கம், உறுப்பினர் சேர்க்கை என புத்தாக்கத்தோடு நடைபெற்ற காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

காரைக்குடி,ஜூன்15- காரைக்குடி கழக மாவட்ட ப.க கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சு. முழுமதி தலைமையில் 11.06.2023  அன்று காலைப் பொழுதில் குறள் அரங்கில் மாவட்ட தி.க தலைவர் ச. அரங்கசாமி, மாவட்டச் செயலாளர் ம.கு. வைகறை முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட ப.க செயலாளரும், ந. செல்வராசன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் நோக்கத்தை ப.க மாநில துணைத்தலைவர் அ.சரவணன் எடுத் துரைத்தார். பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநிலத் தலைவர் வா. தமிழ் பிரபாகரன் தந்தை பெரியார் காலந்தொட்டே பகுத் தறிவு ஆசிரியர் அணி இருந்து வரு வதையும், ஆசிரியர்கள் பெரியார் சிந்தனைகளை, அறிவியல் மனப் பான்மையை மாணவர் உள்ளங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்,. 

பகுத்தறிவாளர் கழக பொதுச் செய லாளர் வி.மோகன் தனது உரையில் பகுத்தறிவாளர் கழகம் தனித்து தனித் தன்மையோடு செயல்பட வேண்டும் என்றும், புதிய உறுப்பினர்களை சேர்ப் பதில் முனைப்பு காட்ட வேண்டும் என் றும், பகுத்தறிவாளர்களை உருவாக்கும் பட்டறையாக ப.க செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குறள் அரங்கத்தை இயக்க செயல் பாடுகளுக்கு  தொடர்ந்து வழங்கி வரும் மாவட்ட ப.க  செயலாளர்  ந. செல்வரா சனுக்கு  நன்றி பாராட்டப்பட்டது. 

நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியவர்கள்

அரசியல்

திராவிடர் கழக காப்பாளர் சாமி. திராவிடமணி, மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், கழகப் பேச்சாளர் என்னாரசு பிராட்லா, காரைக் குடி நகரத் தலைவர் ந.ஜெகதீசன், தேவ கோட்டை நகரத் தலைவர் வீ.முருகப் பன், மாவட்ட அமைப்பாளர் சி. செல்வ மணி, தி.தொ.க மாவட்ட செயலாளர் சொ.சேகர், தேவகோட்டை ஒன்றிய கழக செயலாளர் அ.ஜோசப், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.புரூனோ, பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட அமைப்பாளர் த.பாலகிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் சு. ராஜ்குமார், ப. க. மாவட்டத் துணைச் செயலாளர் ரெ.முத்துக்குமார், தேவகோட்டை ஒன்றிய ப.க. அமைப் பாளர் செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கும் புதிய பொறுப்பாளர்களுக்கும் மாவட்ட திரா விடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பாக பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

புதிய பொறுப்பாளர்கள்:

காரைக்குடி (கழக) மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர்:

சு. முழுமதி,

மாவட்டச் செயலாளர்:

ந. செல்வராசன்,

மாவட்ட அமைப்பாளர்:

துரை.செல்வம் முடியரசன்,

மாவட்ட துணைத் தலைவர்: சு. ராஜ் குமார், மாவட்ட துணைச் செயலாளர் : ரெ. முத்துக்குமார், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட அமைப்பாளர்: த. பால கிருஷ்ணன், தேவகோட்டை ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் :அ. அரவரசன், செயலாளர்: சிவ.தில்லை ராசா, அமைப்பாளர்: செந்தில்குமார்

தீர்மானங்கள் :

1. அய்ம்பெரும் நூற்றாண்டுகளை தொடர் கருத்தரங்கமாக நடத்துவதென தீர்மானிக் கப்பட்டது.

2. புதிய உறுப்பினர்களை சேர்ப்பது எனவும், புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது

3. விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஏடு களுக்கு சந்தா சேர்ப்பதென தீர்மானிக் கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *