புதுடில்லி, ஜூன் 15 – ஹென்லி பிரை வேட் மய்கிரேஷன் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
உலக அளவில் முதலீடு மற்றும் அதிக சொத்துகளைக் கொண்ட செல்வந்தர்கள் குறித்து ஹென்லி தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில், நடப்பு 2023 ஆம் ஆண்டில், 1 மில்லியன் டாலர் அல்லது அதற்கும் அதிகமாக நிகர சொத்து மதிப்புடைய 6,500 நபர்கள் இந்தியாவிலிருந்து வெளி யேறுவர் என எதிர்பார்க்கப்படு கிறது. இதையடுத்து, இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை கணி சமாக குறையும் சூழல் ஏற் பட்டுள்ளது.
அதிக நிகர சொத்து மதிப்பைக் கொண்ட நபர்கள் அதிகளவில் வெளியேறும் நாடுகளின் பட்டிய லில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து இந்தாண்டில் மட்டும் 13,500 பெரும் பணக்காரர் கள் புலம்பெயர்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெரும்பணக்காரர்களை அதிகம் இழக்கும் பட்டியலில் இந் தியா நடப்பாண்டில் இரண்டாவது இடத்தில் இருந்தபோதிலும், கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது தற்போது நிலைமை மேம்பட்டே காணப்படுகிறது. கடந்தாண்டில் இந்தியாவிலிருந்து வெளியேறிய 7,500 பெரும்பணக்காரர்களுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 1,000 குறைவாகவே உள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் பெரும் பணக்காரர்கள் இடம்பெயர்ந்து செல்வது படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் முறையே 1,22,000 மற்றும் 1,28,000 பெரும்பணக்காரர்கள் உலகளவில் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -இவ்வாறு ஹென்லி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.