சுபாங் ஜெயா, ஜூலை 21- சிலாங்கூர் மாநிலம் சுபாங் ஜெயாவில் ஒரு தனியார் வீட்டில் போதைப்பொருள் விருந்து நடத்தியதாக நம்பப்படும் 38 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியக் காவல்துறையினர் நடத்திய சோதனையில் இவர்கள் கைதாகினர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்றும், அவர்களின் வயது 18 முதல் 27 வரை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில், போதைப்பொருளை விநியோகம் செய்ததாகக் கருதப்படும் நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6.5 கிராம் கஞ்சாவும் 1.5 கிராம் கேட்டமின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள் அனைவரும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.