விழுப்புரம், ஜூன் 15-விழுப்புரம் மாவட்டம் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட் டம் விழுப்புரம் ஏ.எஸ்.ஜி. திருமண மண்ட பத்தில் 27.05.2023 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை.திரு நாவுக்கரசு தலைமை ஏற்றார். விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் செயலாளர் வே.ரகு நாதன் வரவேற்றார்.
தலைமைக்கழக அமைப்பாளர் தா. இளம் பரிதி, மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் த.தம்பிபிரபாகரன், விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப. சுப்ப ராயன், விழுப்புரம் மாவட்ட கழகச் செய லாளர் அரங்க.பரணிதரன், விழுப்புரம் மாவட்ட கழக அமைப்பாளர் சே. வ. கோபண்ணா, பொதுக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி தாஸ், விழுப்புரம் மாவட்ட ப.க ஆசிரியரணி அமைப்பாளர் ஆ.செந்தில்வேலன், விழுப் புரம் மாவட்ட ப.க. ஆசிரியரணி துணை அமைப்பாளர் ஆ.பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பகுத்தறிவாளர் கழகத்தலைவர் இரா.தமிழ்செல்வன், மாநில ப.க. பொதுச் செயலாளர் வி.மோகன், மாநில ப.க. பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில ப.க. துணைத்தலைவர் ஆடிட்டர் கு.ரஞ்சித்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற் றினர்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் திரா விடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இறுதியாக விழுப்புரம் மாவட்ட ப.க. அமைப்பாளர் கி.கார்வண்ணன் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பகுத்தறிவாளர் கழகத்திற்கு புதிய உறுப் பினர்கள் சேர்த்தல், வைக்கம் நூற்றாண்டு விழா நடத்துவது, சேர்ந்தநாடு மற்றும் செஞ்சி திருமண விழாவிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வருகைக்கு சிறப்பான வரவேற்பு அளித்தல், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பகுத்தறிவு பிரச்சார தெரு முனைக்கூட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மேலும் விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளராக சிவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.