பக்தி மூடநம்பிக்கையால் ஏற்பட்ட மரணம் கங்கை நீரை எடுக்கச் சென்ற பக்தர்கள் மூவர் பலி

viduthalai
1 Min Read

ஜூலை.21- காசியாபாத், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர்கள் ரித்திக் (வயது 23), அபினவ் (25), சச்சின் (38), அஜய் (30). இவர்கள் கன் வாரியாக்கள் எனப்படும் சிவ பக்தர்கள் ஆவர்.

உத்தரா கண்ட் மாநிலம் அரித்துவாரில் கங்கை நதியில் இருந்து கங்கை நீரை எடுத்து வருவ தற்காக அவர்கள் 4 பேரும் இரண்டு இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டனர்.  டில்லி-மீரட் சாலையில் கத்ரபிரா அருகே ஒரு விடுதி முன்பு சென்று கொண் டிருந்தபோது, எதிர்புறத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸ், அவர்களது இரண்டு இரு சக்கர வாகனங்களின் மீது பயங்கரமாக மோதியது. இதில், 4 பேரும் காயம் அடைந்த னர். அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ரித்திக், அபினவ், சச்சின் ஆகியோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அஜய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு மருத்துவமனையில் நோயாளியை இறக்கிவிட்டு, ஆம்புலன்ஸ் திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. ஆம்புலன்சை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் ஓட்டுநர் மோனு கைது செய்யப்பட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *