‘‘கோவையில் உள்ள முன்னணி கல்லூரிகளின் தாளாளர்களுக்கான கூட்டம், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மமேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள், கல்வித்துறையின் மேம்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி மற்றும் கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார், கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்’’ என்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், கோவையில் பா.ஜ.க., பொறுப்பாளர்களை அழைத்து, கல்லூரி தாளாளர்களையும் அழைத்துக் கூட்டம் நடத்தி என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்?
தமிழ்நாடு அசின் உயர்கல்வித்துறையை ஒதுக்கிவிட்டு, பா.ஜ.க. பொறுப்பாளர்களை வைத்துக் கொண்டு ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் கூட்டம் நடத்தும் அத்துமீறல்களுக்கு முடிவு எப்போது?