குஜராத் மாநிலத்தின் வால்சாட் பகுதியில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மும்பை–சூரத்–ஜெய்ப்பூர்–டில்லி ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை என்.எச்.46-இல், ஒரே வாரத்தில் நடந்த பல்வேறு விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, வால்சாட் மாவட்ட ஆட்சித்தலைவர், சாலைப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “சரியான செப்பனிடல் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், சிறை தண்டனை விதிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலை களின் பெரும்பாலான ஒப்பந் தங்கள் மகாராட்டிரா மற்றும் குஜராத் மாநிலத்திலுள்ள அமைச் சர்கள் மற்றும் அவர்களின் பினாமி நிறுவனங்கள் மூலம் நடைபெறுவதால், வால்சாட் ஆட்சித் தலைவர் யாருக்குச் சிறை தண்டனை விதிப்பார்? என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலைமை, அரசு ஒப்பந்தங்களில் ஊழல், பாதுகாப்பு மீறல் மற்றும் பொறுப்பற்ற நிர் வாகத்தின் விளைவாக ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
குஜராத் பிஜேபி ஆட்சியின் அவலம்! வால்சாட் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாரத்தில் 8 உயிரிழப்பு ஒப்பந்ததாரர்களுக்கு சிறை தண்டனை எச்சரிக்கை

Leave a Comment