கோவை ,ஜூலை 21 கோயம்புத்தூரில் தந்தை பெரியார் பெயரில் தமிழ்நாடு அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவியல் மய்யத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த ‘கண் திருஷ்டி’ படம் அகற்றப்பட்டுள்ளது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த பெரியார் பெயரில் கட்டப்படும் ஒரு நூலகத்தில் உள்ளது. இதுபோன்ற ஒரு படம் வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கோவை காந்திபுரத்தில் அமையவிருக்கும் இந்த நூலகம் மற்றும் அறிவியல் மய்யம், பெரியாரின் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. இந்நிலையில், ‘கண் திருஷ்டி’ படம் வைக்கப்பட்டிருந்தது பொதுமக்களிடமும், திராவிடர் கழகத்தினர் மற்றும் திராவிட இயக்கத்தினர் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
ஒப்பந்தக்காரரால் வைக்கப்பட்டிருந்த படம் எதிர்ப்புகளின் விளைவாக, நூலகம் கட்டப்படும் இடத்தில் இருந்து பொதுப் பணித் துறையால் அகற்றப்பட்டு, இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.