புதுடில்லி, ஜூன் 15 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜாவை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் சந்தித்துப் பேசினார்.
டில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு டில்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. அவசர சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கெஜ்ரிவால் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர் களோடு சந்திப்பின் தொடர்ச்சியாக 14.6.2023 அன்று டில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜாவை சந்தித்து அவசரச் சட்டத்துக்கு எதிரான பரப்புரையில் ஆதரவு கோரினார் கெஜ்ரிவால்.
அவசர சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு து.ராஜா தம்முடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.