அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு!

viduthalai
4 Min Read

தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த முதலமைச்சரால் 2,436 நபர்களுக்கு புதிய ஆசிரியர் பணிக்கான ஆணை விரைவில் வழங்கப்படும்!

கள்ளக்குறிச்சி, ஜூலை 20– கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் தனியார் பள்ளிக் கலையரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடை பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், முன்னிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நேற்று முன்தினம் (18.07.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமை தாங்கி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தேர்ச்சி விகிதக் குறைவு, தேர்ச்சிக் குறைவிற்கான காரணங்கள், பாடவாரியாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் செயல்பாடு, மாணவர்களின் கற்றல் திறன், கற்றல் திறனை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நட வடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு செய்தார், மேலும் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கருத்துகளையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தனித்தனியாகக் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசியதாவது:–

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப் பாக தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதி மேம்பாடு, நவீன மயமாக்கம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பள்ளிக் கல்வித்துறை முன் மாதிரித் துறையாக விளங்கி வருகிறது.

பின் தங்கியப் பள்ளிகளை…

அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு 2025 குறித்த ஆய்வுக் கூட்டம், கள்ளக்குறிச்சியில் இன்றைய தினம் இக்கூட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறன், தேர்ச்சி விகிதம், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், தலைமை ஆசிரியர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பின்தங்கிய பள்ளிகளைக் கண்டறிந்து அதன் நிலையை மாற்றவும் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் மாணவர் களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்தும் விரிவாக கலந்தாலோசனை மேற் கொள்ளப்பட்டது,மேலும் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, புதிய பள்ளிக் கட்டடங்கள் விவரம் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதேபோன்று இன்றைய ஆய்வுக் கூட்டத்திலும் மாணவர்களின் இடைநிற்றலுக்கான காரணம், தேர்ச்சி விகிதம், பள்ளிக்கு மாண வர்களின் சேர்க்கை விகிதம், பள்ளிக்கு வருகை தராத மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளிக்கு வருகை தர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கற்கும் திறனை
கவனிக்க வேண்டும்

பள்ளிகளில் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் கற்கும் திறனை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். ஆசிரியர்கள் மாண வர்களை நன்றாக கவனித்து அவர்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டும், ஆசிரியர்கள் நடத்தும் பாடங் களை மாணவர்களுக்கு நன்றாக புரிந்துள்ளதா, நன்றாக கவனிக் கிறார்களா என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாநில அளவிலான கற்றல் திறன் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அடிப்படையில் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

இல்லம் தேடிக் கல்வி திட்டம்

ஆசிரியர்கள் நடத்தப்படும் பாடங்களிலிருந்து மாணவர்களிடம் எளிய முறையில் கேள்விகளை கேட்க வேண்டும். மாணவர்களின் கல்வி கற்றலை உயர்த்தும் வகையில் ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். உயர்கல்வி மாண வர்களுக்கு உரிய முறையில் பாடம் கற்பித்து வருகிறார்கள், முதலமைச்சர் அவர்களால் கரோனா காலத்தில் மாணவர்கள் கல்விக் கற்கும் வகையில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் உருவாக் கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இதுபோன்று பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி வளர்ச்சிக்கென பல்வேறு தொழில்நுட்பமும் செயல்பட்டு வருகிறது.

அதிகப்படியான தொழில் நுட்பம் வந்தாலும் ஆசிரியர்களுக்கு இணையாக கற்றுத் தர முடியாது. தலைமை ஆசிரியர்கள் அடிக்கடி பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாணவர்களிடம் கல்வித் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட வேண்டும். மாண வர்களின் திறன் அறிந்து ஆசிரி யர்கள் செயல்பட வேண்டும். ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

கல்வித் தரத்தை மேலும் உயர்த்த

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைக் கல்வியைப் போன்று அடிப்படை கல்வியையும் மேம்படுத்த தமிழ்நாடு அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2,436 நபர்களுக்கு புதிய ஆசிரியர் பணிக்கான ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தி லுள்ள அனைத்து பள்ளிகளிலும் எஸ்.எல்.ஏ.எஸ். அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனை ஆசிரியர்கள் தகுந்த முறையில் மாணவர்களுக்கு கற்பித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து கல்விப் பாடத்தை மட்டுமல்லாமல் வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். எனவே கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கற்றல் திறனை அதிகரிப்பதற்கான திட்ட மிடல் மற்றும் செயல்பாடுகளை அனைத்து நிலை கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து அர்ப்பணி ப்புடன் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மா.ரேணுகோபால், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *