பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநருமான வேலு பிரபாகரன் உடலுக்கு, திராவிடர் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அத்துடன் வேலு பிரபாகரன் அவர்களின் சகோதரர்கள் ரவி, ராஜா மற்றும் தாயார் சுப்புலட்சுமி ஆகியோரிடம் ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வில் இனமுரசு நடிகர் சத்யராஜ் அவர்களும் இணைந்து கொண்டார். உடன்: கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே.பாண்டு, அரும்பாக்கம் சா.தாமோதரன், உடுமலை வடிவேல், திரைப்பட இயக்குநர்கள் சங்ககிரி ராஜ்குமார், அகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். (சென்னை வளசரவாக்கம், 19.07.2025)