இஸ்தான்புல், ஜூலை20- 1960களில் துருக்கியேவின் பர்துர் மாநிலத்தில் உள்ள பவு போன் (Boubon) நகரிலிருந்து திருடப் பட்ட ரோமானிய பேரரசர் மார்க்கஸ் அரீலியஸின் சிலை, 65 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக் காவிலிருந்து துருக்கியே விற்கு திரும்பியுள்ளது.
ஆவணச் சான்றுகள்
இந்த தாமிரச் சிலை, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை அமெரிக்காவின் கிலீவ்லந்து ஓவிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக நடந்த அறிவியல் ஆய்வுகள், ஆவணச் சான்றுகள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில், சிலையின் மூலப்பகுதி துருக்கியேவின் பவுபோன் நகரம் என நிரூபிக்கப் பட்டது.
வரலாற்றுச் சாதனை
துருக்கியேவின் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மெஹ்மெட் எர்சாய், “நாங்கள் சரியாக இருந்தோம், பொறுமையாக இருந்தோம், கடுமையாக போராடினோம்—இப்போது வெற்றி பெற்றோம்” எனக் கூறினார். அவர் மேலும், “இந்த சிலையை அதன் சொந்த மண்ணிற்கு திருப்பி கொண்டுவந்தது, வெறும் மீட்பு அல்ல; இது வரலாற்றுச் சாதனை” என்றும் தெரிவித்தார். சிலை விரைவில் துருக்கியேவின் தலைநகர் அங்காராவில் பொது மக்களுக்கு காட்சிக்கு வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது துருக்கியேவின் பழமையான கலாச்சாரச் சொத்துக் களை மீட்கும் முயற்சியில் ஒரு முக்கி யமான வெற்றியாகக் கருதப்படுகிறது.