மேகவியாதி பிடித்த பெண்ணை அவளது உடையினாலும், அணியினாலும் கண்டுபிடிக்க முடியாது. அவளை வைத்தியச் சிகிச்சை மூலமே அறிய முடியும். அதுபோல், தேர்தலில் நிற்பவர்களை அவர்களது பேச்சினால் எழுத் தினால் கண்டுபிடிக்க முடியாது. அவர்களின் நடத்தை, பக்கத்தில் உள்ள அவர்களது நண்பர்கள் யார்? அவர்களது எதிரிகள் யார்? என்பனவற்றால்தான் கண்டுபிடிக்க முடியும்.
‘விடுதலை’ 30.1.1966