வெட்டிக்காடு, ஜூலை 19- 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான அரசு நடத்தும் குறுவட்ட அளவிலான போட்டிகளில் அடுத்து 15.07.2025 அன்று கடற்கரை கைப்பந்து போட்டி (Beach Volley Ball) அனந்தகோபாலபுரம் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது.
போட்டியில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 1 முதல் பரிசும் 2 இரண்டாம் பரிசும் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவதற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியையையும் பள்ளி தாளாளர் அவர்கள் முதல்வர் மற்றும் ஆசிரிய பெருமக்கள், அலுவலக பணியாளர்கள் மனம் உவந்து பாராட்டி மகிழ்ந்தனர்.