அதுபற்றியும் கருத்துச் சொல்லாமே!
* நவீன காலத்திலும் சில நடைமுறைகள் இன்னும் மாறவில்லை. பலர் மனதில் இருக்கும் ஜாதிய வன்மங்களை அகற்றுவது எளிதல்ல.
– மதுரை உயர்நீதிமன்றக் கிளை கருத்து
** வேதம், மனு தர்ம தர்மங்கள் முதல் இந்திய அரசமைப்புச் சட்டம் வரை ஜாதியை பாதுகாக்கவில்லையா? சில இடங்களில் நீதிபதிகளே ஜாதி சின்னங்களோடு காட்சியளிக்கிறார்களே! இதைப் பற்றியும் நீதிமன்றம் கருத்து சொல்லலாம் அல்லவா?
என்ன இறுமாப்பு!
*தோல்வி பயத்தால் ஊர் ஊராகச் செல்கிறார் முதலமைச்சர்.
– பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
>> அப்படி என்றால், இவர்கள் மக்களையே சந்திக்க மாட்டார்களோ? என்ன இறுமாப்பு!