இந்தியாவின் தேசிய நதியான கங்கையைத் தூய்மைப்படுத்தும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட நமாமி கங்கே (Namami Gange) திட்டம், 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, இன்று 11 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, “இமயமலையின் பனிப்பாறைகளில் உருவாகும் இடத்தில் இருந்து அலக்நந்தா நதியுடன் கலக்கும் இடம் வரை கங்கை எவ்வளவு தூய்மையாக உள்ளதோ, அதேபோல் சமவெளிப் பகுதிகளிலும் மாற்றப்படும்” என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கள நிலவரம் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. அலக்நந்தா ஆறு கங்கையுடன் கலக்கும் இடம் இன்று குப்பைக்கூளங்கள் நிறைந்து, மாசடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.
மக்கள் சிறப்பு வரி செலுத்துகின்றனர்
கங்கைச் சமவெளி மாநிலங்களில் வசிக்கும் மக்கள், இந்தத் திட்டத்திற்காகப் பேருந்துக் கட்டண உயர்வின் மூலம் சிறப்பு வரி செலுத்தி வருகின்றனர். கடந்த 11 ஆண்டுகளாக அவர்கள் கங்கையைத் தூய்மைப்படுத்த தங்கள் பங்களிப்பைச் செலுத்தி வந்தாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை. “கங்கையைக் காப்பாற்றுங்கள்” என்ற பெயரில் இயங்கும் சாமியார்கள் அமைப்புகள்கூட, இந்த அரசு குறைந்தது 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாகக் கூறுகின்றன. இதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் நமாமி கங்கா திட்டத்தின் பெயரில் பல ஆயிரம் கோடிகள் வசூலிக்கப்பட்டுள்ளன.
தூய்மை கங்கை நிதி மற்றும்
வெளிநாட்டுப் பங்களிப்புகள்
தூய்மை கங்கை நிதி (Clean Ganga Fund – CGF) இந்திய அரசால் 2015, ஜனவரி 21 அன்று நிறுவப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) மற்றும் இந்திய வம்சாவளியினர் (PIOs) கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணிகளுக்குப் பங்களிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது.
தனிப்பட்ட நன்கொடையாளர்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களும் இந்த நோக்கத்திற்காகப் பங்களிக்க அழைக்கப்பட்டனர். இவர்கள் மூலம் வந்த பணம் எவ்வளவு என்று சரியான கணக்கு இதுவரை வரவில்லை. இருப்பினும் நமாமி கங்கா திட்டத்திற்கு மட்டும் இதுவரை ஒரு லட்சம் கோடிக்கு மேல் செலவாகி இருக்கும் என்று கூறுகின்ற்னர்
பிரமாண்டமான செலவினம்
– ஆனால் என்ன விளைவு?
‘தூய்மை இந்தியா’ மற்றும் “கங்கையைத் தூய்மைப்படுத்துவோம்” என்ற திட்டங்களின் கீழ் குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக வசூலிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தொகை, சீனாவின் ஒட்டுமொத்த ரயில் நெட்வொர்க் கட்டுமானச் செலவில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளில், தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நமாமி கங்கா இந்த இரண்டு திட்டத்திலும் குறைந்த பட்சம் 2 லட்சம் கோடி ரூபாய் செலவாகி உள்ளதாக பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்ற்னார். உண்மை செலவீனம் இதைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
இத்தனை கோடிகளும் குப்பையிலும் கங்கையிலுமே கொட்டப்பட்டு அழிந்ததா அல்லது வேறு எங்கு இத்தப்பணம் சென்றது என்பதே அக்கரை உள்ள ஒவ்வொரு இந்தியரும் வைத்த கேள்வி.