குப்பையாய்ப் போனது ரூ.ஒரு லட்சம் கோடி ‘மக்கள் பணம்’-பாணன்

viduthalai
4 Min Read

2014ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று இந்திய அரசு தூய்மை இந்தியா இயக்கம் (ஸ்வச் பாரத் அபியான்) என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்கியது.  இந்த திட்டத்திற்காக மோடி அரசு சுமார் 1 லட்சம் கோடி வரை வாரி இறைத்துள்ளது. ஆனால் இந்த திட்டம் உண்மையிலேயே வெற்றி பெற்றதா?

திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிப்பது என்பது இதன் முதன்மை நோக்கமாக இருந்தது. அப்போது, பத்து இந்தியக் குடும்பங்களில் நான்கிற்கும் குறைவான குடும்பங்களிடம் மட்டுமே கழிப்பறைகள் இருந்தன என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டின.

குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை முன்னெடுத்தன. தூய்மை இந்தியா திட்டம்தொடங்கப்பட்டதிலிருந்து, தூய்மையும் மேம்பட்ட ஆரோக்கியமும் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. திரைப்படங்கள், அரசியல் மற்றும் விளையாட்டு உலகைச் சேர்ந்த பிரபலங்கள் இந்த இயக்கத்தை ஆதரித்து, தூய்மையான இந்தியாவிற்காகப் பிரச்சாரம் செய்தனர்.

உண்மை நிலை என்ன?

காந்தியாரின் பிறந்தநாளில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 2019 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால்,  உண்மை என்னவென்றால் இந்த திட்டமும் பிற திட்டங்களைப் போன்றே முழுவதும் தோல்வியில் முடிந்த ஒன்றாகப் போய்விட்டது.

இந்த இயக்கம் அதன் உண்மையான நோக்கத்தை முழுமையாக அடைய முடியவில்லை. ‘தூய்மை இந்தியா’ திட்டம்பல முக்கியமான காரணிகளைக் கவனத்தில் கொள்ளவில்லை,

‘தூய்மை இந்தியா இயக்கம்’ நிலத்தடி கழிவுநீர் அமைப்புகளைச் சீரமைப்பதற்கான தேவையை விவாதிக்கவில்லை.

கட்டுரை, ஞாயிறு மலர்

பீகார் தலைநகர் பாட்னா

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பழக்கம் உலகிலேயே இந்தியாவில் மட்டுமே உள்ள மிகவும் இழிநிலையான ஒன்றாகும்.

இதைத் தீர்ப்பதில் தூய்மை இந்தியா திட்டம் தோல்வியடைந்தது. பல தொழிலாளர்கள் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்யும் போது உயிரிழந்துள்ளனர். இந்த உயிர்ப் பலிகளைத் தடுக்க இந்த இயக்கம் தவறிவிட்டது.

தண்டனை நடவடிக்கைகள் இல்லாதது:

எங்கு, எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும், மலம் கழிக்க வேண்டும், குப்பைகளை அகற்ற வேண்டும் என்பது குறித்து முறையான தண்டனை நடவடிக்கைகள் இல்லை.

மறுவாழ்வு இல்லாதது: இந்தியாவில் பெரிதும் பரவலாக உள்ள மனிதக் கழிவுகளை அகற்றும் பழக்கம் முழுமையாக ஒழிக்கப் படவில்லை, மேலும் இந்தத் தொழிலாளர்கள் மறுவாழ்வு பெறவில்லை.

கட்டுரை, ஞாயிறு மலர்

தலைநகர் டில்லி

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கழிப்பறைகளைக் கட்டுவதாக மட்டுமே இருந்தது. ஆனால், பல பகுதிகளில் கழிப்பறை பயன்பாடு இன்னும் குறைவாகவும் திருப்தியற்ற தாகவும் உள்ளது. ஒரு தேசிய முகமையால் நடத்தப்பட்ட ஆய்வில், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் மிகவும் அதிகமாகவே இருப்பது கண்டறியப்பட்டது. இன்றும் மும்பை புறநகர் ரெயில் தண்டவாளங்கள் திறந்தவெளி கழிப்பறையாகவே உள்ளது.

கழிப்பறையும் வாஸ்துவும்.

சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளிநாட்டுப் பயணத்தின் போது வாஸ்து சாஸ்திரம் குறித்து பெருமைபடப் பேசினார் என்று சமூகவலைதளப் பதிவுகளில் எழுதப்பட்டது.

உண்மை என்னவென்றால் வாஸ்துசாஸ்திரத்தில் கழிப்பறை என்பது கிடையாது. கழிப்பறையை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால் கழிவை அள்ள வரும் ஜாதியினர் வீட்டிற்குள் வந்து விடுவார்களே? ஆகையால் தான் வாஸ்து சாஸ்திரத்தில் கழிப்பறைக்கு இடமில்லை.

பெருமை மிக்க வாஸ்துசாஸ்திரத்தில் கழிப்பறைக்கு இடமில்லை என்றால் அங்கே தூய்மை என்பது பெரும் கேள்விக்குறிதான்.

கட்டுரை, ஞாயிறு மலர்

அரியானாவில் பெரும் தொழிலதிபர்கள் வாழும் குர்காவ் நகரம்

இன்றும் கூட வட இந்தியாவில் பல உயர்குடியினர் காலையில் பூணூலை காதில் சுற்றிக்கொண்டு கையில் தண்ணீர் நிரம்பிய பெரிய பாத்திரத்தை கையில் தூக்கிக்கொண்டு செல்வதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.

வாஸ்துபடி அமைக்கப்பட்ட டில்லி  மெட்ரோவின் பல ரயில் நிலையங்களில் கழிப்பறைகளைக் குறிப்பிடவில்லை அதன் அசல் வடிவமைப்பில் கழிப்பறை குறித்த திட்டமே இல்லை.

கட்டுரை, ஞாயிறு மலர்

உத்தரப் பிரதேசம் – மீரட்

இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து டில்லி பாட்டியாலா நீதிமன்றம் குட்டு போட்ட  பிறகே டில்லி மெட்ரோவில் கழிப்பறைகள் அதுவும் வெளிப்பகுதியில் கட்டப்பட்டது.

‘தூய்மை இந்தியா மிஷன்’ (தூய்மை இந்தியா இயக்கம்) தொடங்கப்பட்ட போதிலும், கழிவு மேலாண்மையுடன் தொடர்புடைய ஜாதியப் பாகுபாட்டை இந்தத் திட்டம் முழுமையாகக் கவனிக்கவில்லை. குப்பை அகற்றும் தொழிலில் ஈடுபடு பவர்கள்  குறிப்பிட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்.

சுகாதாரத் தொழிலாளர்களின் ஜாதிய இழிவு நீக்கப்பட்டால் மட்டுமே தூய்மை இந்தியா திட்டத்தின் உண்மையான சாதனைகளை அடைய முடியும்.

தூய்மையின் அடிப்படை விதிகள்

சமூகத்தின் சீரான வளர்ச்சிக்கு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, கல்வி ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, சரியான நீர் மற்றும் சுகாதார வசதிகள், முக்கியம். பள்ளிகள் சரியான மற்றும் சுத்தமான கழிப்பறைகள், சுத்தமான நீர் மற்றும் கை கழுவும் வசதிகளை வழங்கும்போது, அது தொற்றுக் நோய்களைத் தடுக்கும்.

நீண்ட தூரம் செல்ல வேண்டும்

தூய்மை இந்தியா திட்டம்தொடங்கப்பட்ட போதிலும், நாட்டின் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் கிராமப்புறங்களுக்கும் அடிப்படை சுகாதாரத்தை வழங்குவதில் இந்தியா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

கட்டுரை, ஞாயிறு மலர்

லக்னோவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் கண்டாகர்

மனிதக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இன்னும் இந்தத் திட்டத்தில் தீர்க்கப்படவில்லை. மனிதக் கழிவுகளை அகற்றும் பிரச்சினை இந்தியாவில் புதியதல்ல; இது ஜாதி அடிப்படையிலானது மற்றும் மனித உயிருக்கு ஆபத்தானது. இருப்பினும், பல தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்திற்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அந்தக் கழிவுநீர் குழிகளில் இறங்க வேண்டியுள்ளது.

கட்டுரை, ஞாயிறு மலர்

மோடியின் தொகுதியான வாரணாசி பெகுசாராய் பகுதி

இந்தத் திட்டம் மாநிலங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் பொதுக் கழிப்பறைகளை கட்டியிருக்கலாம். முந்தைய தரவுகளுடன் ஒப்பிடுகையில், திறந்தவெளி மலம் கழித்தல் குறைந்துள்ளது. ஆனால், தூய்மையான இந்தியாவை அடைவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *