ஜெயங்கொண்டம், ஜூலை 18– பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஜெயங் கொண்டம் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி 16.7.2025 அன்று தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
போட்டிகள் 11, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர். அதில் ஜெயங் கொண்டம் பெரியார் பள்ளி மாணவிகள் பன்னி ரெண்டாம் வகுப்பை சேர்ந்த அபிநயாசிறீ முதலிடத்திலும், வெர்ஜின் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
மேலும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என குறிப்பிடத்தக்கது. போட்டியில் வென்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ், ஆர்.ரவிசங்கர் மற்றும் ஆர்.ரஞ்சனி ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள், உட்பட பலர் வாழ்த்தினர்.