18.7.2025
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ம.பி.யில் எம்.பி.பி.எஸ். படிப்பில் வெகு விமரிசையாக தொடங்கப்பட்ட ஹிந்தி வழி கல்வியின் மூலமாக தேர்வு எழுத எந்த மாணவரும் முன்வரவில்லை; ஆங்கிலத்தில் தேர்வு எழுதி உள்ளனர்.
* பாஜக – அதிமுக ஆட்சியின் கேடுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேச்சு.
* “ஓரணியில் தமிழ்நாடு” மூலம் திமுகவில் இதுவரை 1.35 கோடி பேர் இணைந்துள்ளனர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகாரில் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்காளர்களை திருடும் கிளையாக மாறி விட்டது, ராகுல் கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் இந்தியா கூட்டணியில் (மகாகத்பந்தன்) காங்கிரசுக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது; ஆர்.ஜே.டி 2020-ஆம் ஆண்டு பெற்ற இடங்களை தக்க வைத்துக் கொள்ளும். பேச்சுவார்த்தைகள் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று ஆர்.ஜெ.டி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தி இந்து:
சட்டத்தின் ஆட்சி உள்ள நாட்டில் ஜாதியின் அடிப்படையில் கோவில் நுழைவு மறுக்க முடியாது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்: உடையார்பாளையம் தாலுகாவில் புதுக்குடி அய்யனார் கோவிலில் எல்லா பக்தர்களும் ஜாதி பேதமின்றி நுழைய அனுமதிக்க அரியலூர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு. ‘ஏழு வகையறா’ என்ற குழுவால் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு நிகழ்ந்ததாக மனுதாரர் புகார் அளித்ததன் பேரில் நடவடிக்கை. (புகார் தந்தவரும் ஹிந்து; அனுமதி மறுத்தவர்களும் ஹிந்து?)
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம் குறித்து, ஜூலை 19ஆம் தேதி டில்லியில் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி சந்திப்பு நடக்கிறது. மக்கள் குடியேற்றம் தொடர்பான கேள்வி என்பதால், வலுவான எதிர்ப்பு தேவையென இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் தேஜஸ்வி பிரசாத் கருத்து.
* நயினார் தேர்தல் ஊழல் வழக்கு: ஒருவர் ரூ.98 லட்சத்தை 1.5 கிலோ தங்கம் மாற்றியதாக சிபி-சிஅய்டி விளக்கம். தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் வாக்குக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் தொடர்புள்ளதாக சிபி-சிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்தது; நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை சுமார் ரூ.3.98 கோடி பணத்துடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
* தெலங்கானா மாதிரியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: காங்கிரஸ் ஓ.பி.சி கவுன்சில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை: முதலமைச்சர் சித்தராமையா, ‘நீதிப் போராளி’ என ராகுலுக்கு பாராட்டு. அவர் ஒன்றிய அரசை ஜாதிவாரி கணக் கெடுப்பு அறிவிக்க வலியுறுத்தியதை பாராட்டினார். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க, 50% இடஒதுக்கீடு வரம்பை தளர்த்த வேண்டும்; அரசியலில் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி டெலிகிராப்:
* இந்தியாவின் பாரம்பரிய வெளிநாட்டுக் கொள் கையை கைவிட்டு தவறான வழியில் செல்வதை கண்டித்து, காங்கிரஸ் கடும் விமர்சனம். காசா நிலைமை தொடர்பான அய்.நா. தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் விலகியது என்பது வருத்தமளிக்கக்கூடியது மட்டுமல்ல, ஏற்க முடியாதது என்றும் விமர்சனம்.
* விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையின்மை என்பதால்தான் குற்றங்கள் அதிகரித்துள்ளன என பீகார் காவல்துறை உயர் அதிகாரி பேச்சு. வலை தளங்களில் கடும் எதிர்ப்பு’ பலர் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறியதை மறைக்கும் சூழ்ச்சியா இது? என குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அரசியல் நிலைமைகள் குறித்து, விரைவில் நடை பெறவுள்ள நாடாளுமன்ற பருவ கூட்டத்திற்காக, ஜூலை 19 அன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் இணையவழியாக சந்திக்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், பகல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம், ஜம்மு & காஷ்மீர் முழுமையான மாநில அந்தஸ்து மீட்பு உள்ளிட்டவை விவாதிக்கப்பட உள்ளது. இதன்போது விவசாயிகள் பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்மை, பெண்கள் பாதுகாப்பு, சமீ பத்திய அகமதாபாத் விமான விபத்து போன்றவை காங்கிரசும் ஆதரவு எதிர்க்கட்சிகளும் பேசவுள்ளனர்.
– குடந்தை கருணா