வெட்டிக்காடு, ஜூலை 18– கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-15 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி அன்னாரது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பல்வேறு மாணவச் செல்வங்கள் பங்கு பெற்று அவரது இயல்புகளையும், சாதனைகளையும் வெளிப்படுத்தினர். மேடையில் கவிதை, பேச்சு, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் மேடையில் நடத்தப்பட்டு அவருடைய சாதனைகளை மாணவர்களுக்கு விளக்கினர். கல்வி வளர்ச்சி நாளையொட்டி போட்டிகள்-தமிழ் கவிதை, ஆங்கில மற்றும் தமிழ் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவை பள்ளி முதல்வர் முன்னின்று நடத்தினார். அனைத்து ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.