சிங்கப்பூர், ஜூலை 18– சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றிய 393 நிறுவனங்களுக்கு ‘Company of Good’ என்ற விருதை சிங்கப்பூரை தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட அதிகமான நிறுவனங்கள் இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
சிங்கபூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும்தேசியத் தொண்டூழியர் மற்றும் கொடை நிலையம் (National Volunteer & Philanthropy Centre) நல்ல செயல் செய்யும் நிறுவனம் ‘Company of Good’ என்ற பெயரில் விருதை வழங்கிவருகிறது
பல்வேறு நிறுவனங்கள் தங்களில் செயல்பாடுகளால் சமூக அக்கறையோடு பல்வேறு சேவைகளைச் செய்துவருகிறது இவற்றை ஊக்குவிக்கவும், இதன் மூலம் பல்வேறு நிறுவனங்களும் இதே போன்று சேவைசெய்யவும் இந்த அமைப்பு விருதுகளை வழங்கி வருகிறது. சமூக மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொண்ட விருது பெற்ற 393 நிறுவனங்களில் பெரும்பாலானவை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகும். சில்லறை வர்த்தகம், உற்பத்தி, கட்டுமானம் என 10க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள், கல்வி நிலையங்களைக் கட்டுதல், ஆதரவற்றை முதியவர்களுக்கு சேவை செய்தல், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டு தங்கள் ஊழியர்களுக்கும் ஊக்கம் கொடுத்து வருவது போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், கடந்தஆண்டு இந்த நிறுவனங்கள் ஒரு மில்லியன் மணிநேரம் தொண்டூழியப் பணிகளிலும் ஈடுபட்டு, சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் தொழில் தொடங்க இந்த விருதும் முக்கிய பங்குவகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.