சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, ‘அன்புமணி கூட்டணி ஆட்சியில் பங்கேற்போம் என கூறியுள்ளார். பா.ம.க. உங்கள் கூட்டணிக்கு வரும் என கூறியிருந்தீர்களே?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி, ‘பா.ம.க. கூட்டணிக்கு வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன். கூட்டணியில் இல்லை. பாமக வந்தால் பார்த்துக் கொள்ளலாம். ஏங்க, இன்னும் பந்தியிலேயே உட்கார வைக்கல… இலை ஓட்டைன்னு சொன்னா என்னங்க பண்றது. பா.ம.க.வில் இருப்பது உட்கட்சி பிரச்சினை. அவர்களது பிரச்சினையில் நாங்கள் தலையிடவில்லை’ என்றார்.