சென்னை, ஜூலை.18– எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்பை இந்திய கம்யூனிஸ்டு நிரா கரிக்கிறது என்றும் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
சிறந்த நகைச்சுவை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செய லாளர் முத்தரசன், சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலு வலகத்தில் பத்திரிகையா ளர்களிடம் கூறியதாவது:-
கம்யூனிஸ்டுகள், வி.சி.க. தங்கள் அணிக்கு வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். இது 2025-இல் சிறந்த நகைச்சுவை. இந்த அழைப்பை இந்திய கம்யூனிஸ்டு நிராகரிக்கிறது.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி ஒப்பேராத கூட்டணி. எங்கள் அணிக்கு வந்தால், ரத் தின கம்பளம் விரித்து வரவேற்போம் என்றும் பழனிசாமி சொல்லி யுள்ளார். அவர் ஏற்ெக னவே பா.ஜனதா வுடன் சேர்ந்திருக்கிறார். அவர்கள் வைத்திருப்பது ரத்தின கம்பளம் அல்ல. ரத்த கறைப்படிந்த கம்பளம். அதில் எடப் பாடி பழனிசாமி பயணம் செய்கிறார். ஆபத்தை உணர்ந்தும், அவருக்கு ஏற்பட்ட நெருக்கடியால் இதை அவர் தொடருகிறார்.
அ.தி.மு.க. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்திருக்கிறது. பா.ஜனதா தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு இவர்களால் பேராபத்து காத்திருக்கிறது. அதனு டன் அ.தி.மு.க. சேர்ந்தது தவறு என அக்கட்சி தொண்டர்களே வெளிப் படையாக சொல்கிறார்கள்.
மக்களுக்கான கூட்டணி
தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணி போல், இது வரை தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகாலம் கூட்டணி நீடித்ததே கிடையாது. தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணி இல்லை. மக்களுக்காக உருவாக்கப்பட்டது. வருகிற சட்டமன்ற தேர்தலையும் இந்த கூட்டணி தான் சந்திக்க இருக்கிறது.
கூட்டணி விருப்ப பூர்வமாக அமைய வேண்டும். பா.ஜனதா அதிகாரத்தை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமியை நிர்பந்தப்படுத்தி அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்த்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி நம்பகமான தலைவர் கிடையாது. தி.மு.க.கூட்டணியில் நாங்கள் அசிங்கப்படுகி றோம் என்று பழனி சாமியிடம் சென்று மனு கொடுத்து கொண்டி ருக்கிறோமா?.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதன் மீது முதலமைச்சர் உடனுக் குடன் நடவடிக்கை எடுக் கிறார். அது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்