தஞ்சை, ஜூலை 18 தஞ்சாவூர் மாநகர கழக செயலாளர் இரா.வீரக்குமாரின் 50 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, 15.7.2025 அன்று அவரது இல்லத்திற்குச் சென்று கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாநில கிராமப் பிரச்சார குழு அமைப்பா ளர் முனைவர அதிரடி க.அன்பழகன், மாவட்ட தலைவர் சி. அமர்சிங், மாவட்ட துணை தலைவர் பா.நரேந்திரன், மாநகர கழகத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர்
இரா.வெற்றிக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, கீழவாசல் பகுதி செயலாளர் பழக்கடை கணேசன், மாநகரத் துணைத் தலைவர் ஆ. டேவிட், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி,கலைச்செல்வன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர்
இரா.துரைராசு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் முனைவர் ந.எழிலரசன் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அவரது வாழ்விணையர் மற்றும் மாமியார் தேன்மொழிஜெயபால் ஆகி யோர் உடன் இருந்தனர்.
பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 500 வழங்கி மகிழ்ந்தார்.