புதுடில்லி, ஜூன் 16 – சிக்குன்குன்யா நோய் பாதிப்புக்கு ஒரே தவ ணையில் செலுத்தக்கூடிய வி எல்ஏ-1553 தடுப்பூசி பாதுகாப் பானது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ‘லான்செட் ஜார்னல்’ மருத்துவ ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக நடத் தப்பட்ட சோதனையில் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொசுக்களால் பரவும் சிக்குன்குன்யா நோய் பாதிப்பு ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக் காவின் பல்வேறு இடங்களில் அதிகரித்து வருகிறது.
நான்கு முதல் எட்டு நாள்க ளுக்கு கடுமையான காய்ச்சல் அறிகுறியுள்ள சிக்குன்குன்யா நோயாளிகளுக்கு தலைவலி, சோர்வு, வாந்தி, கடுமையான தசை மற்றும் மூட்டு வலி ஏற் படுகிறது.
சிலருக்கு வாரக் கணக்கிலோ, மாதக் கணக்கிலோ, ஆண்டுக் கணக்கிலோ இந்த மூட்டு வலி தொடார்கிறது. அந்த நோயால் உயிரிழப்பு அதிகம் இல்லை என் றாலும், வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இது கடுமை யான அச்சுறுத்தலை ஏற்படுத்து கிறது.
சிக்குன்குன்யாவுக்கு தற் போது வரை எந்தவித அங்கீ கரிக்கப்பட்ட தடுப்பூசியோ, நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரிக்கும் சிகிச்சை முறையோ இல்லை.
இந்த நிலையில், தற்போது முதல் முறையாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள விஎல்ஏ-1553 தடுப்பூசி சிக்குன்குன்யா பாதிப்பு அதி கரித்திருக்கும் நாடுகளில் உள் ளவர்களுக்கும் அந்த நாடுக ளுக்கு பயணம் மேற்கொள்ப வர்களுக்கும் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், பிரான்சைச் சேர்ந்த பயோடெக் நிறுவன மான வால்நேவா தயாரித்துள்ள இந்த தடுப்பூசிக்கு, சிக்குக்குன்யா அதிகம் காணப்படும் நாடுகளில் சோதனை நடத்தப்படாததால், அந்தப் பகுதி மக்களுக்கு எந்த அளவுக்கு நோய் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என்று கூற முடியாது என்றும் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனார்.
இந்தத் தடுப்பூசியை செலுத் தியவுடன் நோய் எதிர்ப்பு சக்தி சிறந்த அளவில் அதிகரிப்பதா கவும், திடீரென சிக்குன்குன்யா நோய் அதிக அளவில் பரவினால் அதைக் கட்டுப்படுத்த இந்த தடுப்பூசி உதவும் என்றும் வய தானவார்களுக்கு இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரிக்கிறது என்றும் விஎல்ஏ-1553 தடுப்பூசி நிறுவனத்தின் மேலா ளர் மார்டினா ஷ்னைடார் தெரிவித்தார்.
அமெரிக்காவில் 43 இடங் களில் 4,115 இளைஞர் களுக்கு விஎல்ஏ-1553 தடுப்பூசி செலுத் தப்பட்டு சோதனை நடத்தப் பட்டது. அதில் ஒரு வாரம், 28 நாள்கள், 3 மாதம், 6 மாதம் இடைவெளியில் நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதிக்கப்பட்டது.
ஒரு முறை செலுத்தப்பட்ட தடுப்பூசியிலேயே 99 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. வயது வரம்பின்றி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது தெரியவந்தது.
குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கும் கார்ப் பிணிகள், சிறுவர்களுக்கும் சிக் குன்குன்யா தடுப்பூசி செலுத் தலாம். இந்தப் பிரிவைச் சேர்ந் தவர்களுக்கான பரிசோதனை பிரேசிலில் நடைபெற்று வரு கிறது.
சிக்குன்குன்யா பெருந்தொற் றாகப் பரவுவதற்கு முன் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது நல்ல செய்தி என்று தீநுண்மி பகுப் பாய்வு, தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் இஸ்ரேல் டெகோனஸ் மருத்துவ ம;ணீயத்தின் நிபுணர் கேதரின் ஸ்டீபன்சன் தெரிவித்தார் என லான்செட் ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிகள் வெளி யானதையடுத்து, பல்வேறு நாடு களில் விஎல்ஏ-1553 சிக்குன் குன்யா தடுப்பூசியை விற்பனை செய்ய அனுமதி கோரி வால் நேவா நிறுவனம் விண்ணப்பிக் கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.