கிருட்டினகிரி – ஊணாம் பாளையம் கோவிந்தன் – முருகம்மாள் ஆகியோரின் மகன் கோ.சரவணனுக்கும், அழகாபுரி வெங்கட்ராமன்-சிவசக்தி ஆகியோரின் மகள் வெ.இரம்யா (எ) மஞ்சுளாவுக்கும் கடந்த 14.7.2025 அன்று காலை 10 மணியளவில் மணமகள் இல்லத்தில் வாழ்க்கை இணை யேற்பு நிகழ்வை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.
கிருட்டினகிரி மாவட்டத் தலை வர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, ஊற்றங் கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து. இராசேசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, கா.மாணிக்கம், தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர் முனியப்பன், சுரேசு மற்றும் கழகத்தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.