தஞ்சை, ஜூலை 18 தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத்தின் இரண்டாவது கலந்துரையாடல் கூட்டம் நேற்று (17.7.2025) மாலை 6 மணிக்கு தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை, பூபதி நினைவு பெரியார் படிப்பகம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கத்தில்தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத்தலை வர் காங்கிரஸ் கட்சி தஞ்சை மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.இராஜேந்தி ரன் தலை மையில் நடைபெற்றது.
விடுதலைவாசகர் வட்ட துணைத் தலைவர் வே.துரை அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் விடுதலை வாசகர் வட்டம் செயல்பாடுகள் மற்றும் அதன் நோக்கம் குறித்து தொடக்க உரை யாற்றினார்
கழக மாவட்ட தலைவர் சி. அமர்சிங், கழக மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், கழக மாவட்ட துணைத் தலைவர் பா. நரேந்திரன், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் மு.செந்தில்குமார், விடுதலை வாசகர் வட்டம் புரவலர் டாக்டர் த.அருமைக்கண்ணு, விடுதலை வாசகர் வட்ட புரவலர் பேராசி ரியர் உரு.இராஜேந்திரன், விடுதலை வாசகர் வட்டப்புரவலர் கோ.இரவிச்சந்திரன், விடுதலை வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் ப.ஜெய ராஜ், எஸ்.என்.குசலவன், கவிஞர் பகுத்தறிவுதாசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ந.எழிலரசன், மாநில இளைஞரணி துணைச் செய லாளர் படிப்பக செயலாளர்
இரா.வெற்றிகுமார், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனந்தி, விடுதலைவாசர் வட்ட துணைச் செயலாளர் விசுவநாதன், தஞ்சை மாநகரத் துணைத் தலைவர் ஆ.டேவிட், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என்.குண சேகரன், தஞ்சை மாநகர செயலாளர் படிப்பக தலைவர் இரா.வீரகுமார், ஆகியோர் கருத்து ரையாற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்மொழிந்து மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ. பிரகாஷ் உரை யாற்றினார்.
நிறைவாக கூட்டத்திற்குத் தலைமைேயற்ற தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவர் பி.ஜி.இராஜேந்திரன் உரையாற்றினார். ஆசிரியர் அவர்கள், எந்த நம்பிக்கை வைத்து என்னை அடையாளம் கண்டு தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவராக அறிவித்தார்களோ, அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், தொடர்ந்து பணியாற்றுவேன். இந்தக் கூட்டமே எனக்கு மிகப்பெரிய உற்சாகமளிக்கிறது தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் ஆசி ரியர் நம்பிக்கை காப்பாற்றுவோம். இளைஞர்களிடம் கருத்துகளை அதிகம் பரப்பும் பணியில் ஈடு படுவோம் என தனது உரையில் தெரிவித்தார்.
தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் செல்வன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டமும், பூபதி நினைவு பெரியார் படிப்பக நிர்வாகக் குழுவும் இணைந்து முக்கிய சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாதம் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப டுத்துவது என தீர்மானிக்கப்பட்டது,
ஜூலை 19 கழக துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதி வதனி பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
விடுதலை வாசகர் வட்ட உறுப்பி னர்கள் அனைவரும் விடுதலை நாளி தழை வாங்கி படிப்பது எனவும் தஞ்சை மாநகரத்தில் விடுதலை சந்தாக்களை பெருமளவில் சேர்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது
தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட
புதிய பொறுப்பாளர்கள்
புதிய பொறுப்பாளர்கள்
பொறியாளர் பா.சிவானந்தம், பேராசிரியர் ப.திருநாவுக்கரசு ஆகியோர் தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத்தின் புரவலர்களாக ஏற்கெனவே உள்ள பொறுப்பாளர்களோடு அறி விக்கப்பட்டனர்.
விடுதலை சந்தா
வழங்கியோர்
வழங்கியோர்
விடுதலை வாசகர் வட்ட புரவலர் பேராசிரியர் உரு.இராஜேந்திரன், விடு தலை வாசகர் வட்ட துணைத்தலைவர் வே. துரை, பெரியார் பெருந்தொண்டர் சவுரிராஜன் ஆகியோர் விடுதலை ஆண்டு சந்தா தலா ரூ.2000 என, விடுதலை வாசகர் வட்ட தலைவர் பி.ஜி.இராஜேந்திரனிடம் ரூ.6000 வழங்கினர்.
சிறப்புக் கூட்டத்தை சிறப்பாக நடத்திட, கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் நன்கொடை அளித்து ஊக்கப்படுத்தி மகிழ்ந்தனர்.
ஜூலை 15 அன்று 50 ஆவது பிறந்த நாள் கண்ட மாநகர செயலாளர் இரா.வீரகுமாருக்கு மாவட்ட காப்பாளர் மு. அய்யனார் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.