தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள்நேற்று (15.6.2023) சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் மொத்தம் 6 லட்சம் சதுரஅடி பரப்பளவில், 1000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.