தாசி முறை

1 Min Read

அரசியல்

உங்களுக்குத் தெரியாது – என்னைப் போன்றவர்கள் வயதானவர்கள் உங்களுக்குத் தெரியாது இருந்தால் தாசித் தெருவில் நான் அமல் செய்தது தெரியும். பிறகு நான் தானே தாசி முறையையே அழித்தவன். ‘குடிஅரசு’ நிலையத்தில் 10 மாநாடுகள் நடத்தியிருக்கிறோம். அவினாசி போன்ற இடங்களில் மாநாடு நடக்கும். நான் சென்றால் தனியாக எனக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுப்பார்கள். பிறகு நாங்கள் தாசித் தொழில் கூடாதென்று சட்டமே செய்தோம். அப்பொழுது சர்க்காரும் (அரசும்) பொட்டுக் கட்டக் கூடாதென உத்தரவும் போட்டுவிட்டார்கள்.

சட்டசபையில் ஒரு தடவை தாசி முறை கூடாது என்று தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். திரு சி.எஸ். ரத்தின சபாபதி முதலியார் முயற்சியால் திருமதி முத்து லட்சுமி ரெட்டிக்குச் சட்டசபையில் ஒரு உறுப்பினர் பதவி கிடைத்தது. அப்பொழுது அந்த அம்மையார் மேற்படி தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். இதைக் கண்டு சத்தியமூர்த்தி அய்யர் துள்ளிக் குதித்தார். அப்பொழுது அந்த அம்மையார் “இத்தனை நாள் நாங்கள் செய்து வந்த தொண்டு போதும். எங்களுக்கு வந்த புண்ணியமும் போதும். இனிமேல் உங்கள் இனப் பெண்கள் செய்து அந்தத் தொண்டின் பலனையும், புண்ணியத்தையும் பெற்று, இப்பொழுது இருப்பதைவிட, இன்னும் கெட்டிக்காரராக ஆகட்டும்“ என்று சொல்லிய பிறகுதான் சத்தியமூர்த்தி அடங்கினார்.

8-7-1956 இல் ஈரோட்டில் தந்தை பெரியார்சொற்பொழிவு: 

(விடுதலை’ 22-7-1956)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *